பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.
பிரதமர் தமது உரையில், விரிவடைந்து வரும் இந்தியா-பிரான்ஸ் வணிக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மைக்கு அது அளித்துள்ள உத்வேகத்தையும் குறிப்பிட்டார். அதன் நிலையான அரசியல் மற்றும் கணிக்கக்கூடிய கொள்கைச் சூழல் அமைப்பின் அடிப்படையில், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியாவின் ஈர்ப்பை அவர் எடுத்துரைத்தார். சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசுகையில், காப்பீட்டுத் துறையில் இப்போது 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் சிவில் அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்; சுங்கக் கட்டணம் சீரமைக்கப்பட்டது; வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்காக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டி சீர்திருத்தங்களைத் தொடர்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டார். நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை நிறுவுவதற்காக ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே உணர்வில், கடந்த சில ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட இணக்க ஏற்பு நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் பாதுகாப்பு, எரிசக்தி, நெடுஞ்சாலை, சிவில் விமானப் போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், நிதி தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சித் துறைகளில் வழங்கப்படும் மகத்தான வாய்ப்புகளைப் பார்வையிடுமாறு பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் திறன்கள், திறமை மற்றும் புதுமை, அதன் புதிதாகத் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி, குவாண்டம், முக்கியமான தாதுக்கள் மற்றும் ஹைட்ரஜன் பணிகளில் உலகளாவிய பாராட்டு மற்றும் ஆர்வத்தை விளக்கிய அவர், பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தத் துறைகளில் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். புதுமை, முதலீடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டாண்மைகளை வளர்ப்பதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரான்சின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை, டிஜிட்டல் இறையாண்மை அமைச்சர் எரிக் லோம்பார்ட் ஆகியோரும் உரையாற்றினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இரு தரப்பு தலைமை நிர்வாக அதிகாரிகள்:
இந்திய தரப்பு:
நிறுவனத்தின் பெயர் (துறை) | பெயர் மற்றும் பதவி | |
1 | ஜூபிலியண்ட் புட்ஸ் ஒர்க்/ ஜூபிலியண்ட் லைப் சயின்ஸ், உணவு & பானங்கள் | ஹரி பார்த்தியா, இணைத் தலைவர் மற்றும் இயக்குநர் |
2 | சிஐஐ | சந்திரஜித் பானர்ஜி, தலைமை இயக்குநர் |
3. | டிட்டாகார் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட், ரயில்வேஸ் & உள்கட்டமைப்பு | உமேஸ் சவுத்ரி, துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் |
4. | பாரத் லைட் & பவர் பிரைவேட் லிமிடெட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி) | தேஜ்பிரீத் சோப்ரா, தலைவர் & தலைமை செயல் அதிகாரி |
5. | பி.மஃபத்லால் குழுமம், ஜவுளி மற்றும் தொழிலியல் உற்பத்தி | விஷாத் மஃபத்லால் தலைவர் |
6. | போட், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் (வேரபில்ஸ்) | அமன் குப்தா, இணை நிறுவனர் |
7. | தலித் இந்தியன் வர்த்தகம் மற்றும் தொழில் சபை, வர்த்தக ஆலோசனை மற்றும் உள்ளடக்கம் | மிலிந்த் காம்ப்ளே, நிறுவனர்/தலைவர் |
8. | ஸ்கைரூட் ஏரோஸ்ஸ்பேஸ், & ஏரோஸ்பேஸ் & விண்வெளி & தொழில்நுட்பம் | பவன்குமார் சந்தனா, இணை நிறுவனர் |
9. | அக்னிகுல், ஏரோஸ்ஸ்பேஸ் & விண்வெளி & தொழில்நுட்பம் | ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி |
10. | டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், ஏரோஸ்ஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு | சுகாரன் சிங், மேலாண்மை இயக்குநர் |
11. | யுபிஎல் குழுமம், வேளாண் வேதியியல் மற்றும் வேளாண் வணிகம் | விக்ரம் ஷ்ராஃப், துணைத் தலைவர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி |
12. | சுலா ஒயின்யாட்ஸ், உணவு மற்றும் பானங்கள் | ராஜீவ் சமந்த், தலைமை நிர்வாக அதிகாரி |
13. | டைனமாடிக் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஏரோஸ்ஸ்பேஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் | உதயந்த் மல்ஹௌத்ரா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் |
14. | டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ், பொறியியல் மற்றும் ஆலோசனை | அமித் சர்மா, மேலாண்மை இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி |
15. | நைக்கா, காஸ்மெட்டிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் | ஃபல்குனி நய்யார், தலைமை நிர்வாக அதிகாரி |
பிரான்ஸ் தரப்பு
நிறுவனத்தின் பெயர் (துறை) | பெயர் மற்றும் பதவி | |
1 | ஏர் பஸ், ஏரோஸ்ஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு | குய்லூம் ஃபௌரி, தலைமை நிர்வாக அதிகாரி |
2. | ஏர் லிக்விட், கெமிக்கல்ஸ், சுகாதாரப் பராமரிப்பு, பொறியியல் | பிரான்கோயிஸ் ஜாக்கோ, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஏர் லிக்விட் குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் |
3. | ப்லாப்லாகார், போக்குவரத்து, சேவைகள் | நிக்கோலஸ் பிரஸ்ஸன், தலைமை நிர்வாக அதிகாரி & இணை நிறுவனர் |
4. | கேப்ஜெமினி குழுமம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் | ஐமான் எசாத், தலைமை நிர்வாக அதிகாரி |
5. | டனோன், உணவு மற்றும் பானங்கள் | ஆன்டொயின் டி செயின்ட் – ஆப்ரிக் Antoine de SAINT-, தலைமை நிர்வாக அதிகாரி |
6. | இடிஎஃப், எரிசக்தி, மின்சாரம் | லூக் ரெமாண்ட், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி |
7. | எகிஸ் குழுமம், கட்டிடக்கலை கட்டுமானம் பொறியியல் | லாரன்ட் ஜெர்மைன், தலைமை நிர்வாக அதிகாரி |
8. | எஞ்சி குழுமம், எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி | கேத்தரின் மெக்கிரோகர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வாரிய உறுப்பினர். |
9. | லோரியல், அழகுசாதனப் பொருட்கள் & நுகர்வோர் பொருட்கள் | நிக்கோலஸ் கிரோனிமஸ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழு உறுப்பினர் |
10. | மிஸ்ட்ரல் ஏஐ, செயற்கை நுண்ணறிவு | ஆர்தர் மென்ஷ், தலைமை நிர்வாக அதிகாரி & இணை நிறுவனர் |
11. | நேவல் குரூப், பாதுகாப்பு, கப்பல் கட்டுதல், பொறியியல் | பியர் எரிக் பொம்மெல்லெட், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி |
12. | பெர்னோட் ரிக்கார்ட், மதுபானங்கள், எஃப்எம்சிஜி | அலெக்சாண்டர் ரிக்கார்ட், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி |
13. | சஃப்ரான், விண்வெளி மற்றும் பாதுகாப்பு | ஆலிவர் ஆண்ட்ரிஸ், தலைமை நிர்வாக அதிகாரி |
14. | செர்வியர், மருந்துகள், சுகாதாரப் பராமரிப்பு | ஆலிவர் லாரூ, தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி |
15 | டோட்டல் எனர்ஜிஸ் எஸ்இ, எரிசக்தி | பேட்ரிக் பயோன்னே, தலைவர் & நிர்வாக அதிகாரி |
16 | விகாட், கட்டுமானம் | கைய் சிடோஸ், தலைவர் & நிர்வாக அதிகாரி |