Wed. Apr 16th, 2025

காமேஷ்வர் சௌபால் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு அளப்பரிய பங்காற்றிய அவர், ராமர் மீதான பக்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

பிஜேபியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலருமான காமேஷ்வர் சௌபால்-ன் மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தீவிர ராம பக்தரான இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பைச் செய்தார். தலித் பின்னணியில் இருந்து வந்த இவர், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு ஆற்றிய பணிகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். இந்தத் தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”


காமேஷ்வர் சௌபால் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta