புதுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் தர நிலைகளை வடிவமைப்பதில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி கூறியுள்ளார்.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனம், நொய்டாவில் உள்ள அதன் தேசிய தர நிர்ணயப் பயிற்சி நிறுவனத்தில் சுகாதாரத் துறை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் 28 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 36 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இதில் புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார, மருத்துவ சாதனத் துறையில் தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும், இந்தத் துறையில் பிஐஎஸ்-சின் தரநிலை செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

சுகாதாரத் துறையில் இந்தியாவின் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி, தரநிலைகள் தொடர்பாக கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்துப் பேசினார்.
பிஐஎஸ்-சின் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கவும், பொறியியல் பாடத்திட்டத்தில் தரங்களை ஒருங்கிணைக்கவும் நிபுணர்களை அவர் வலியுறுத்தினார். இந்தியத் தரம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.inPressReleasePage.aspxPRID=2099416