Sat. Apr 19th, 2025

திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய கலாச்சாரம் மற்றும் சாதனைகள் மீதான அவரது ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

“திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற சந்திரிகா டாண்டனுக்கு வாழ்த்துக்கள். ஒரு தொழில்முனைவோர், பிறர் நலனில் அக்கறை செலுத்துபவர் மற்றும் இசைக் கலைஞர் என்ற முறையில் அவரது சாதனைகளில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்! அவர் இந்தியக் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை பிரபலப்படுத்த பாடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. அவர் பலருக்கும் உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறார்.

2023-ல் நியூயார்க்கில் அவரைச் சந்தித்ததை நான் மிகவும் விருப்பத்துடன் நினைவு கூர்கிறேன்.”


கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta