Sun. Apr 13th, 2025

மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது. 2008-09-ல் ரூ.11,915.22 கோடி அளவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2024-25-ல் ரூ.1,22,528.77 கோடியாக அதிகரித்துள்ளது.

2004-05-ல் உணவு தானிய உற்பத்தி 204.6 மில்லியன் டன்னிலிருந்து 2023-24-ல் 332.3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், குறைந்தபட்ச ஆதரவு விலை திருத்தங்கள் சிறந்த விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்கின்றன.

நெல், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2008-09ல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850 மற்றும் ரூ.1,080 ஆக இருந்து 2023-24ல் முறையே ரூ.2,300 மற்றும் ரூ.2,425 ஆக உயர்ந்துள்ளது.

விவசாயிகளை மையமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளில் பிரதமரின் வேளாண் திட்டம் (ரூ.3.46 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது), பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (உரிமைகோரல்களில் ரூ.1.65 லட்சம் கோடி), சிறந்த சந்தை அணுகலுக்காக 1,400+ மண்டிகளை ஒருங்கிணைத்த மின்னணு சந்தை ஆகியவை அடங்கும். அறுவடைக்கு பிந்தைய நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக 87,500 திட்டங்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதி ரூ.52,738 கோடியை அனுமதித்துள்ளது.

வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் 2008-09ல் ரூ.11,915.22 கோடியாக இருந்தது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் 2013-14ல் ரூ.21,933.50 கோடியாகவும், மேலும் 2024-25ல் ரூ.1,22,528.77 கோடியாகவும் உயர்த்தப்பட்டது, இது வேளாண் வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098424


இந்தியாவின் வேளாண் பின்னணியை வலுப்படுத்துதல்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta