Sat. Apr 12th, 2025

2025-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தில்லியில் உள்ள இந்தியப் படைவீரர்கள் முகாமில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் விருதுகளை வழங்கினார். டிராக்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சிபிடபிள்யூடி அலங்கார ஊர்திகள் மற்றும் கலைஞர்களுக்கு சிறப்பு பரிசுகளையும், ஆறு நினைவுப் பரிசுகளையும் திரு சஞ்சய் சேத் வழங்கினார்.

மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்) / பிற துணைப்படைகளின் அணிவகுப்பு குழுக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளின் அணிவகுப்பு குழுக்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. ·

சிறந்த அணிவகுப்புக்கான விருது ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டது ·

மத்திய ஆயுத காவல் படை / பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்புக்கான விருது தில்லி காவல் அணிவகுப்பு படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097650


குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக அணிவகுத்து சென்ற அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் விருதுகளை வழங்கினார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta