Sun. Apr 13th, 2025

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“எனதருமை நண்பர், அதிபர் இம்மானுவல் மேக்ரோன் அவர்களே @EmmanuelMacron, இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களின் அன்பான வாழ்த்துகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டு இதே நாளில் நீங்கள் பங்கேற்றது நமது அரசுகள் ரீதியான கூட்டாண்மை மற்றும் நீடித்த நட்புறவின் உச்சகட்டமாகும். மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால், பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு செயல்திற உச்சி மாநாட்டில் விரைவில் சந்திப்போம்.”

அயர்லாந்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அவர்களே, @MichealMartinTD உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ஜனநாயகத்தின் மீதான பகிரப்பட்ட நம்பிக்கை அடிப்படையில், இந்தியா – அயர்லாந்து இடையேயான நீடித்த நட்புறவு வரும் காலங்களில் தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.”


இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta