Mon. Jan 13th, 2025

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, தனது உயிரி தொழில், உயிரி உற்பத்தி முன்முயற்சி குறித்த தொடரில் ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கை இன்று (ஜனவரி 13) நடத்தியது. இந்த இணையவழி அமர்வானது பயோ இ3 கொள்கையின் கீழ் முக்கிய களமான “பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி” என்பதில் கவனம் செலுத்தியது. ஆகஸ்ட் 2024-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ இ3 கொள்கை, உயிரி அடிப்படையிலான கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளாவிய தலைமையிடத்தில் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோ இ3 என்பது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம் ஆகும்.

கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நிலையான, மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்தில் முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும் தளத்தை இந்த கருத்தரங்கு வழங்கியது. நிலையான விளைச்சல் கிடைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தரத்தை மேம்படுத்தவும், நமது எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யவும், விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகளுக்கான அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை இந்த விவாதங்கள் எடுத்துரைத்தன. உற்பத்தி, பதப்படுத்துதல், நுகர்வு, கழிவு மேலாண்மை ஆகியவற்றில் தொடங்கி முழு மதிப்புகூட்டல் சங்கிலித் தொடரும் விளைபொருள் வீணாவதைத் தடுப்பதற்கும் அதிகபட்ச செயல்திறனைப் பெறுவதற்கும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான சவால்களுக்கு உயிரியல் தொழில்நுட்ப தலைமையிலான தீர்வுகள் நாட்டை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்துவதுடன், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும். அதே வேளையில், நிலையான எதிர்காலம், இலாபகரமான பொருளாதார சூழலை நோக்கி நாட்டை வழிநடத்திச் செல்லும் என்று உயிரி தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி டாக்டர் வைஷாலி பஞ்சாபி கூறினார்.

உயிரி தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி டாக்டர் சுமிதா குமாரி, நாட்டில் வேளாண் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் உயிரி உற்பத்தியின் பயன்பாடுகள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092394


“பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி” என்ற கருப்பொருளில் ஐந்தாவது இணையவழி கருத்தரங்கு இன்று நடைபெற்றது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta