Thu. Jan 9th, 2025

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 7 அன்று புது தில்லியில் உள்ள இந்தியா ஹேபிடட் மையத்தில் குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழு குறித்த பயிலரங்கை நடத்தியது. பாதுகாப்பான இணையம் தொடர்பான பங்குதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், 200-ன் கீழ் குறை தீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தப் பயிலரங்கில் குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்கள், சமூக ஊடக தொடர்பாளர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறைதீர்ப்பு அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக போலி உள்ளடக்கத்திற்கு எதிராக விரைவாக செயல்படுமாறு சமூக ஊடக தொடர்பாளர்களை அரசு வலியுறுத்தியுள்ளது. பயனர்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இணையத்தில் செல்ல முடியும் என்பதை உறுதி செய்து, சிக்கல்களை உடனடியாகத் தீர்க்க குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் திறமையாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு கிருஷ்ணன் பேசியபோது, பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் விரைவான குறை தீர்க்கும் செயல்முறையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். சாத்தியமான சிக்கல்களை அடையாளம் காண்பதற்கும், பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிவதற்கும் மேல்முறையீட்டு ஆணையத்திற்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கும் இடையிலான வழக்கமான, தொடர்பு முக்கியமானது, இறுதியில் அது பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091074


பாதுகாப்பான இணையத்திற்கான குறை தீர்க்கும் கட்டமைப்பை மேம்படுத்த குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழு பயிலரங்கு

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta