புதுமையான கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தலைமைத்துவம் மற்றும் முன்முயற்சிகள் மூலம் பருவநிலை மாறுதல் நடவடிக்கைகளில் உலகளாவிய தரத்தை இந்தியா அமைத்து வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, லைஃப் இயக்கம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற முன்முயற்சிகள், நீடித்த மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்றன என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
“புதுமையான கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தலைமைத்துவம் மற்றும் சர்வதேச சூரிய கூட்டணி, லைஃப் இயக்கம் மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற முயற்சிகளுடன் இந்தியா காலநிலை நடவடிக்கையில் உலகளாவிய தரங்களை உருவாக்கி வருகிறது, இது நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.”