Wed. Jan 1st, 2025

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை  ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் பெருமையாக விளங்கும் செஸ் சாம்பியனான குகேஷுடன் ஒரு சிறந்த கலந்துரையாடல் அமைந்தது!

நான் இப்போது சில ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரிடம் என்னை மிகவும் கவர்வது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும். அவரது தன்னம்பிக்கையும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அதில் இளைய உலக சாம்பியனாக மாறுவேன் என்று அவர் கூறி இருந்தார். இந்த கணிப்பு இப்போது நடந்துள்ளது. அவரது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.”

“தன்னம்பிக்கையுடன், குகேஷ் அமைதியையும் பணிவையும் கொண்டுள்ளார். வெற்றி பெற்றவுடன், அவர் அமைதியாக இருந்தார். கடினமாக சம்பாதித்த இந்த வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது என்பதை முழுமையாக புரிந்துகொண்டு தமது புகழில் மூழ்கினார். இன்று எங்கள் உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை  ஏற்படுத்தும் திறனைச் சுற்றியும் இருந்தது.”

“ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வெற்றியிலும், அவர்களின் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடினமான, முயற்சிகள் மூலம் அவருக்கு ஆதரவளித்த குகேஷின் பெற்றோரை நான் பாராட்டினேன். அவர்களின் அர்ப்பணிப்பு விளையாட்டைத் தொடர கனவு காணும் எண்ணற்ற இளம் ஆர்வலர்களின் பெற்றோருக்கு ஊக்கமளிக்கும்.”

“குகேஷிடமிருந்து அவர் வென்ற விளையாட்டின் அசல் சதுரங்கப் பலகையைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரும் டிங் லிரெனும் கையெழுத்திட்ட சதுரங்கப் பலகை ஒரு நேசத்துக்குரிய நினைவுப் பரிசு.”


செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta