2024-ம் ஆண்டில் வர்த்தகத் துறையின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கை
இந்தியாவும், ஐரோப்பிய வர்த்தக சங்கமும், வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் 2024 ஆண்டு மார்ச் 10-ம் தேதி கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படும். இதன் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பு (WTO) –
உலக வர்த்தக அமைப்பின் (WTO) 13-வது அமைச்சர்கள் மாநாடு (MC13) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 2, 2024 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் வளரும் நாடுகள், உலகின் தென்பகுதி நாடுகளில் விவசாயம், நீடித்த வளர்ச்சி, மீன்வளம், முதலீடு, மின்னணு வர்த்தகம், போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் காலாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் சுகாதாரக் கூட்டங்களில் இந்தியா பங்கேற்கிறது.
“வெளிப்படைத்தன்மை” குறித்த முன்மொழிவு
வர்த்தக நடைமுறைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் இரண்டு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது: உலக வர்த்தக அமைப்பின் குழு கூட்டத்தில், குறிப்பிட்ட வர்த்தகம் தொடர்பான 15 விவகாரங்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப பயன்பாடு குறித்த இந்தியாவின் ஆய்வறிக்கை வர்த்தகம், சுற்றுச்சூழல் குழுவின் உறுப்பு நாடுகளிடமிருந்து பரிந்துரைகளின் அடிப்படையில் பருவநிலை நெகிழ்வுத்திறன் குறித்த தொழில்நுட்பம் அடிப்படையிலான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்படும். இதன் அடிப்படையில் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும்.
இந்தியாவில் மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நீண்டகால நடவடிக்கைகள், புவிசார் வரையறைகள் வளரும் நாடுகளின் உரிமைகளைப் பாதுகாக்க சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல் போன்றவை குறித்து இந்தியா ஆலோசனை நடத்தியது.
வளமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (IPEF)
வர்த்தகம், விநியோகச் சங்கிலி, தூய்மையான மற்றும் நேர்மையான பொருளாதார நடவடிக்கைகள் ஆகிய நான்கு அம்சங்களுடன் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா- பசிபிக் பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரண்டாம் அம்சத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலுக்கு வந்தது.
இந்தியா -அமெரிக்கா இரு தரப்பு ஒத்துழைப்பு:
இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கனிம, வளங்கள் விநியோகச்சங்கிலி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து யெல்படுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகளிடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தொழில் துறை வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மாநாட்டில் 47 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் 18 பிற நாடுகளிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதில் முக்கிய துறைகள் குறித்த விவாதங்கள், 380 திட்ட வாய்ப்புகள் 780-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் கூட்டங்கள், ஆகியவை இடம்பெற்றன. 47 கண்காட்சியாளர்கள் 7 ஆப்பிரிக்க தூதரகங்களின் விளக்கக்காட்சிகள், முதலீட்டிற்கான மகத்தான சாத்தியக் கூறுகளை வெளிப்படுத்தின. இந்த மாநாட்டின் இடையே, மாலாவி, சாட், சோமாலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நிலையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் ஜிம்பாப்வே, சோமாலியா, நைஜர், கானா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் வர்த்தக செயலாளரின் இருதரப்பு சந்திப்புகளும் நடைபெற்றன.
புதிய முயற்சிகள்
ஆய்வக வைரங்கள் மற்றும் இயந்திரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதி சார்பு நிலையை குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பணிகள் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் 1210 தேயிலைத் தோட்டங்களில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் சிறந்த கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.
என்.பி.ஓ.பி. தரத்தின் கீழ் சான்றளிக்கப்பட்ட 5000 விவசாயக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் விவசாயிகள், மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் சூழல் அமைப்பின் மூலம் எழும் சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகள் காரணமாக பயனடைவார்கள். இயற்கை வேளாண் விளைப் பொருட்களின் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த அதிகரிப்பு 2025-26-ம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் வரம்புகள் அதிகரிப்பு
வங்கிகளுக்கான ஏற்றுமதி கடன் காப்பீடு (WT-ECIB) திட்டத்தின் மூலம் மூலதன கடன் வரம்புகள் 80 கோடி ரூபாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூலை 1, தேதி முதல் `ஏஏ“ அல்லது அதற்கு சமமான மதிப்பீடு கொண்ட கணக்குகளுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்துடன் செலவு குறைந்த ஏற்றுமதி கடனை வழங்க வங்கிகளுக்கு இந்த திட்டம் உதவும். இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதிக் கடன் பெறுவதை மேம்படுத்தவும், ஏற்றுமதிக் கடன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 8,000 புதிய சிறு ஏற்றுமதியாளர்களும், கூடுதலாக 1,000 புதிய சிறு ஏற்றுமதியாளர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள்
மத்திய பட்ஜெட் 2024-25-ல், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், பாரம்பரிய கைவினைஞர்களுக்கு சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்களை நிறுவ மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மையங்கள் தடையற்ற ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் செயல்படும் கிடங்கு, பேக்கேஜிங், முத்திரை சான்றிதழ், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு வர்த்தக வருவாய் மேலாண்மை போன்ற விரிவான ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088048