Sat. Apr 19th, 2025

பாரதியாரின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை தமது இல்லத்தில் பிரதமர் வெளியிடவுள்ளார்

கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

7, லோக் கல்யாண் மார்க்கில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாரதியார் எழுதிய படைப்புகளின் தொகுப்பை வெளியிட இருப்பதாகவும் திரு மோடி அறிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தொலைநோக்குப் பார்வை கொண்ட  கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான அவரது வார்த்தைகள் எண்ணற்ற மக்களிடையே தேசபக்தி மற்றும் புரட்சிக் கனலை மூட்டின. சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த அவரது முற்போக்கான கொள்கைகளும் அதே அளவு ஊக்கமளிக்கின்றன.

7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவரது படைப்புகளின் தொகுப்பை வெளியிடுகிறேன். இந்த முயற்சியை மேற்கொண்ட திரு சீனி விஸ்வநாதன் அவர்களை நான் பாராட்டுகிறேன்.”


சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta