Tue. Dec 24th, 2024

நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்திய ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு,  அவருக்கு  மரியாதை செலுத்துகிறேன். அரசியல் நிர்ணய சபையின் தலைவராக, இந்திய ஜனநாயகத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்ததில் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். இன்று நாம் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் மேலும் உத்வேகம் அளிக்கின்றன.”


நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta