Tue. Dec 24th, 2024

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறி அவர் பாராட்டினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் கூறியதாவது:

“எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவம் வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. வீரர்களின் விழிப்புணர்ச்சியும், துணிச்சலும் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு பங்களிக்கின்றன.”


எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta