மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் வெற்றி வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஒரு மகத்தான சாதனை!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நமது ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடினர். அவர்களின் வெற்றி பல வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்”.