மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரக்கன்று நட்டு, பூமியின் நிலையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
“அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரக் கன்றை நட்டு, பூமியின் நிலையான சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.”