அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி வருவாய் உட்பட கணிசமான பலன்களை அடைந்த சிறப்பு பிரச்சாரம் 4.0 க்கு திரு மோடி பாராட்டு
கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.
கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுப்பதுடன், தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“பாராட்டுக்குரியது!
திறமையான மேலாண்மை மற்றும் முனைப்பான செயல்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சி சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. கூட்டு முயற்சிகள் எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் இரண்டையும் ஊக்குவிக்கும் என்பதை இது காட்டுகிறது’’.