Tue. Dec 24th, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (06.11.2024) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பர் திரு டொனால்ட் டிரம்பிற்கு (@realDonaldTrump) மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது முந்தைய பதவிக்காலத்தின் சிறப்புகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்”


அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta