Tue. Dec 24th, 2024

பிராந்திய இணைப்பு திட்டம்-உடான் -(ஆர்.சி.எஸ்-உடான்) இன்  கீழ்  மத்திய பிரதேசத்தின் ரேவா,  சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் ஆகிய மூன்று விமான நிலையங்களை  பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து திறந்து வைத்தார்.  இந்த விமான நிலையங்களில் இருந்து விமான சேவை விரைவில் தொடங்கப்படும்.

இந்தியாவில், குறிப்பாக தொலைதூர பகுதிகள் மற்றும் பின் தங்கிய இடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்காக அரசின் ஆதரவுடன் கூடிய முன்முயற்சியான ஆர்.சி.எஸ்-உடான்,  7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  10 ஆண்டுகால தொலைநோக்குப்  பார்வையுடன், அக்டோபர் 21, 2016 அன்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின் முக்கிய அங்கமாக இத்திட்டம் விளங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ்,  சிம்லா முதல் தில்லி வரையிலான முதல் விமான சேவையை ஏப்ரல் 27, 2017 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள சேவை வழங்கப்படாத வழித்தடங்களை மேம்படுத்தி, சாமானிய மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

இதுவரை 144 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்கு ஆர்.சி.எஸ்-உடான் திட்டம் வழி வகுத்திருப்பது, விமானப் போக்குவரத்து அணுகலை  மேம்படுத்துவதில்  திட்டத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. இதுவரை 601 உடான் வழித்தடங்கள் இயக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தின் முந்த்ரா முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தேசு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குலு, தமிழ்நாட்டின் சேலம் வரை, ஆர்.சி.எஸ்-உடான் திட்டம் நாடு முழுவதும் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஹெலிபோர்ட்களுடன் கூடுதலாக பத்து விமான நிலையங்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.


ஆர்.சி.எஸ்-உடான் திட்டத்தின் கீழ் சஹரான்பூர், ரேவா மற்றும் அம்பிகாபூர் விமான நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta