Sat. Apr 19th, 2025

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த பிரதிநிதிகளுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 -ல் ‘டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்’ என்ற அரங்கை அமைத்துள்ளது.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024 நிகழ்ச்சியின் போது பாரத் மண்டபத்தில் இந்தியாமொபைல் காங்கிரஸின் 8 வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் (16.10.2024) நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸில் டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலத்தை பார்வையிட்டார்

தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அரங்கிற்கு வருகை தந்து பல்வேறு மேம்பட்ட மின்னணு அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மின்-ஆளுமை தீர்வுகளை பார்வையிட்டார்.

மெய்ட்டி பெவிலியன்

டிஜிலாக்கர், உமாங், ஆதார், யுபிஐ, இ-சஞ்சீவனி, ஒஎன்டிசி, டிஜிட்டல் இந்தியா பாஷினி ஆகியவற்றில் பிரதிநிதிகளுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, அமைச்சகத்தின்  அமைப்புகளான சி-டாக், நிக்கி, சமீர் ஆகியவை நாட்டில் மேட்-இன்-இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் அரங்குகளை அமைத்துள்ளன.

இந்த அதிநவீன அரங்கின் மூலம், அளவிடக்கூடிய மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் குடிமக்களுக்கு எளிதான ஆளுமை ஆகியவற்றைக் கொண்டுவரும் திட்டங்கள் குறித்து உலகளாவிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சகம் முயல்கிறது.

ரத்த வங்கி தேடல், ரயில் நேவிகேஷன், ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றிதழ் உருவாக்கம், பாஸ்போர்ட் சேவா போன்ற சில முக்கியமான சேவைகளை ரோட்டோஸ்கோப் மூலம் நிகழ்நேரத்தில் உமாங் பூத் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. மறுபுறம், பார்வையாளர்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் பெட்டகத்தில் வைத்து டிஜிட்டல் இந்தியா வணிகப் பொருட்களைப் பெற அனுமதிக்கிறது. பிரதிநிதிகள் டிஜிலாக்கர் சுற்றுச்சூழல் அமைப்பின் நேரடி ஆர்ப்பாட்டம் மற்றும் பதிவு செய்வதற்கான படிப்படியான செயல்முறையையும் பெறலாம்.

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை சார்பில் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அக்டோபர் 15 முதல் 18, 2024 வரை இந்த நான்கு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 -ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta