பாரத மண்டபத்தில் உள்ள அனுபூதி மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார். இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதில் பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இதுபற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“இன்று, விரைவுசக்தி பெருந்திட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு , பாரத மண்டபத்தின் அனுபூதி மையத்திற்குச் சென்றேன், அங்கு இந்த முன்முயற்சியின் மாற்றகரமான சக்தியை நான் அனுபவித்தேன்.”
“இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பயணத்திற்கு வேகம் சேர்ப்பதில் பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதையும், எந்தவொரு சாத்தியமான சவாலைக் குறைப்பதையும் உறுதி செய்வதற்காக தொழில்நுட்பத்தை இத்திட்டம் அற்புதமாகப் பயன்படுத்துகிறது.”