Tue. Dec 24th, 2024

சமையல் எண்ணெய்க்கான எண்ணெய்ப் பனை தேசிய இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட எண்ணெய்ப் பனை நடவு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 15 மாநிலங்களில் 12,000 ஹெக்டேர் பரப்பளவில் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் பனைக் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளப்பட்டன.

2024 ஜூலை 15 அன்று தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு, மாநில அரசுகள், எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.

2024 செப்டம்பர் 15 வரை தொடரும் இந்த இயக்கத்தில், ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல பங்கேற்பு காணப்படுகிறது.

பதஞ்சலி ஃபுட் பிரைவேட் லிமிடெட், கோத்ரேஜ் அக்ரோவெட், த்ரீ எஃப் ஆயில் பாம் லிமிடெட் போன்ற முன்னணி எண்ணெய்ப் பனை பதப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சியில் ஏராளமான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகள், தோட்ட இயக்கங்கள், விளம்பர நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு வெற்றிகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

2021 ஆகஸ்ட்  இல் இந்திய அரசால் சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்பட்டது.  எண்ணெய்ப் பனை சாகுபடியை விரிவுபடுத்துவதையும், எண்ணெய்ப் பனை துறையின் வளர்ச்சிக்கான மதிப்புச் சங்கிலி சூழல் அமைப்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், முக்கிய அங்கமாக  எண்ணெய்ப் பனை தோட்ட இயக்கம் உள்ளது.


சமையல் எண்ணெய்க்கான எண்ணெய்ப் பனை தேசிய இயக்கத்தின் கீழ் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta