எம்2எம் சேவைகளுக்காக பதிவு செய்யப்படாத அனைத்து எம்2எம் சேவை வழங்குநர்கள் மற்றும் WPAN/WLAN இணைப்பு வழங்குநர்கள், தங்கள் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, செப்டம்பர் 30, 2024-க்குள் பதிவு செய்யுமாறு தொலைத்தொடர்புத் துறை வலியுறுத்தியுள்ளது. தவறினால் அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு உரிமதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தொலைத்தொடர்பு வளங்களை திரும்பப் பெறவோ அல்லது துண்டிக்கவோ வழிவகுக்கும். கடந்த காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமதாரர்களிடமிருந்து தொலைத்தொடர்பு வளங்களைப் பெற்ற பதிவு செய்யப்படாத அனைத்து நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு செப்டம்பர் 30, 2024 அன்று முடிவடைகிறது.
டிராயின் பரிந்துரைகள் மற்றும் எம்2எம் தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 2022-ல் சேவைகளுக்கான அனைத்து எம்2எம் சேவை வழங்குநர்கள் (மற்றும் WPAN/WLAN இணைப்பு வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை துறை வெளியிட்டது. பதிவு என்பது சரல் சஞ்சார் போர்ட்டல் (https://saralsanchar.gov.in/) மூலம் ஒரு எளிய மற்றும் வெளிப்படையான ஆன்லைன் ஒரு முறை செயல்முறையாகும். அதைத் தொடர்ந்து, தரநிலை அடிப்படையிலான மற்றும் பாதுகாப்பான சூழல் அமைப்பைப் பரப்புவதற்காக, அனைத்து வகையான வணிகங்களையும் அனுமதிக்கும் வகையில் பதிவின் நோக்கம் நீட்டிக்கப்பட்டது.