திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகமும் பெண்கள் -குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து 9 மாநிலங்களில் 27 முன்னேறும் ஆர்வமுள்ள மாவட்டங்களில் சிறப்புப் பகுதிகளில் பெண்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி திட்டத்திற்கான அறிமுக அமர்வை நடத்தின.
இந்த முன்னோடித் திட்டம் இரு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பில் நடைபெறுகிறது. தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் நுழைவதை எதிர்கொள்ளும் தடைகளை நிவர்த்தி செய்ய இந்த முயற்சி முயல்கிறது. இந்த திட்டத்தில் வளர்ப்பு அமர்வுகள் அடங்கும். இந்தத் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் இது நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 4000 பயனாளிகளை இலக்காகக் கொண்டு இப்பயிற்சி நடத்தப்படும். இந்த திட்டம் பாரம்பரியமற்ற, அதிக தேவை உள்ள வேலை பணிகளில் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049420