Sat. Apr 5th, 2025

பேரிடர் நிர்வாகம் குறித்த அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு கருத்தரங்கை தில்லியில் உள்ள கொள்கை ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு, பயிற்சிக்கான தேசிய தொலைத் தொடர்பு நிறுவனம், எல்எஸ்ஏ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொலை தகவல் தொடர்புத் துறையின் பேரிடர் நிர்வாகப் பிரிவு நடத்தியது.

இந்தக் கருத்தரங்கை தொலை தகவல் தொடர்பு துறையின் உறுப்பினர் (தொழில்நுட்பம்) திருமதி மது அரோரா, தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு ராஜேந்திர ரத்னூ ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பேரிடர் பாதுகாப்புக்கான தயார் நிலையை விரிவுபடுத்துதல் குறித்த ஆழ்ந்த விவாதம், நிபுணர் அமர்வுகள் ஆகியவை இந்தக் கருத்தரங்கில் இடம் பெற்றன. இந்தக் கருத்தரங்கில் தொலை தகவல் தொடர்புத் துறை தலைமை இயக்குநர் திரு ஜி.ஆர்.ரவி, இந்தத் துறையின் மூத்த அதிகாரிகள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தயார் நிலை, தடுப்பு நடவடிக்கை, மீட்பு, பேரிடர் குறைப்பு, உயிர்கள் பாதுகாப்பு, நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் தொலை தகவல் தொடர்பு துறையின் பங்களிப்பு மையப்பட்டிருப்பது இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய திருமதி மது அரோரா, ஒருங்கிணைந்த எச்சரிக்கை நடைமுறை என்பது பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை பெருமளவு குறைப்பதற்கு உதவி செய்கிறது என்றும், இதற்கு தொலை தகவல் தொடர்பு துறை முக்கியப் பங்களிப்பை செய்கிறது என்றும் கூறினார். ஒருங்கிணைந்த எச்சரிக்கை நடைமுறையின் மூலம் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பேரிடர் குறித்த தகவல்கள் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் செய்திகள் அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்தார். நிகழ் நேர தரவுகளை பகிர்வது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள், மருத்துவக் குழுக்களின் செயல்பாடு, அவசரகால சேவைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய தகவல்களை அளிப்பது ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக்கு முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தொலைத் தகவல் தொடர்பு கட்டமைப்பு, அரசு முகமைகளுக்கும் தொலைத் தொடர்பு சேவை வழங்குவோருக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்துதல், தொலைத் தொடர்பு ஊழியர்களுக்கு பேரிடர் நிர்வாகம் குறித்து சிறப்புப் பயிற்சி அளித்தல் ஆகியவை இந்தக் கருத்தரங்கில் பரிந்துரைகளாக எடுத்துரைக்கப்பட்டன.

மேலும் படிக்க: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049573

பேரிடர் நிர்வாகம் குறித்த அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta