Tue. Dec 24th, 2024

பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும்  ஒலி பரப்புதலுக்கான பகிரப்பட்ட ஆடியோ-காட்சிகள் (PB-SHABD) மார்ச் 13, 2024 அன்று வீடியோ ஆடியோ, உரை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தினசரி செய்திகளை ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செய்தி பகிர்வு சேவையாக தொடங்கப்பட்டது.

விரிவான கவரேஜுக்கான விரிவான கட்டமைப்பு

1500-க்கும் மேற்பட்ட நிருபர்கள், மற்றும் ஸ்ட்ரிங்கர்களின் வலுவான நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, 24 மணி நேரமும் செயல்படும் 60 பிரத்யேக எடிட்டிங் டெஸ்க்குகளின் ஆதரவுடன், PB-SHABD இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சமீபத்திய செய்திகளை வழங்குகிறது. விவசாயம், தொழில்நுட்பம், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் போன்ற 50-க்கும் மேற்பட்ட செய்தி வகைகளை உள்ளடக்கிய 1000 க-கும் மேற்பட்ட கதைகள், பிராந்திய செய்தி அலகுகள் (ஆர்.என்.யூ) மற்றும் தலைமையகங்களிலிருந்து அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தினமும் பதிவேற்றப்படுகின்றன.

PB-SHABD-ன் முக்கிய அம்சங்கள்

PB-SHABD மூலம் வழங்கப்படும் உள்ளடக்கம் லோகோ இல்லாதது, மேலும் இந்த தளத்திலிருந்து உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு நன்றி என்ற வார்த்தையை  பயன்படுத்த தேவையில்லை. கூடுதலாக, இந்த சேவையில் நேரடி ஒலிபரப்பு அம்சம் உள்ளது, இது ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய விருது விழாக்கள், தேர்தல் பேரணிகள், முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகள் போன்ற நேரடி நிகழ்வுகளின் பிரத்யேக கவரேஜை வழங்குகிறது.

அணுகலை மேலும் மேம்படுத்த, ஒரு ஊடக களஞ்சியம் ஒரு காப்பக நூலகமாக உருவாக்கப்பட்டு வருகிறது, இது சந்தாதாரர்களை தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி நூலகங்களிலிருந்து அரிய மற்றும் காப்பக காட்சிகளை சிறப்பு தொகுப்புகளுடன் எளிதாக அணுக அனுமதிக்கிறது.

ஊடக நிறுவனங்கள் மார்ச் 2025 வரை பதிவுசெய்து கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஆர்வமுள்ள நிறுவனங்கள் https://shabd.prasarbharati.org/register  என்ற முகவரியில் பதிவு செய்யலாம்

புதுப்பிப்புகளுக்கு, PB-SHABD X (முன்னாள் ட்விட்டர்)-ல் https://x.com/PBSHABD மற்றும் Instagram -ல் https://www.instagram.com/pbs


பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்புக்கான பகிரப்பட்ட ஆடியோ காட்சிகள் (PB-SHABD): ஒரு விரிவான செய்தி பகிர்வு சேவை

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta