நாட்டின் நிலக்கரி தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-2024-ம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.828 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆகும். இது 2022-2023-ம் ஆண்டில் 893.191 மில்லியன் டன்னாக இருந்தது. இது சுமார் 11.71% வளர்ச்சியாகும். மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டில் (ஜூன் 24 வரை), 247.396 மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 223.376 மில்லியன் டன் (தற்காலிகமானது) உற்பத்தியுடன் ஒப்பிடும்போது சுமார் 10.75% வளர்ச்சியாகும். நிலக்கரி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.