அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சுகாதார திட்டமிடலுடன் இணைந்து ‘அறிவியல், தொழில்நுட்ப தொடர்பு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் 2024 ஜூன் 11 அன்று நடத்தியது.
பல்வேறு பின்னணியைச் சேர்ந்த அறிவியல் தொடர்பாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்களை ஒன்றிணைத்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஊடகங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் மற்றும் தொழில்நுட்ப சான்றுகள், ஆராய்ச்சியை எளிய முறைகளில் தகவல் அளிக்க சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் பயிலரங்கில் உரையாற்றிய போது, அறிவியல் புரிதலை மேம்படுத்த இதுபோன்ற கூட்டு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்ய எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2024532