Tue. Dec 24th, 2024

கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாடு திட்டத்தை துறை அதிகாரிகள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், தொழில்துறை வழிகாட்டிகள், பட்டியலிடப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின்  பிரதிநிதிகள், வடிவமைப்பு, தொழில் முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் பேராசிரியர் சுதிர் வரதராஜன், முதன்மை ஆய்வாளர்கள் மற்றும் இணை முதன்மை ஆய்வாளர்கள், உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோர் காணொலிக் காட்சி முறையில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய, திரு கே சஞ்சய் மூர்த்தி, இந்தத் திட்டம் தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஒருங்கிணைப்புடன் நடைபெறும் என்று கூறினார்.  பல்வேறு முயற்சிகள் மூலம் உயர் கல்வி நிறுவனங்களுக்கு தொழில்துறை வல்லுநர்கள் தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். தங்கள் நிறுவனத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 30 உயர் கல்வி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டுத் திட்டம், அடையாளம் காணப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களை தொழில்துறை வழிகாட்டிகளின் ஆதரவுடன் தங்கள் நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டில் கவனம் செலுத்த தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் , வடிவமைப்பு, உற்பத்தி மையம், மாளவியா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் 30 உயர் கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019877


வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை திரு சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta