Tue. Dec 24th, 2024

Month: October 2024

இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 -ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த பிரதிநிதிகளுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 -ல் ‘டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்’ என்ற அரங்கை அமைத்துள்ளது.…

குடியரசுத் தலைவர் நேற்று மவுரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்

மவுரித்தானியா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை மவுரித்தானியாவில் இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார் இந்திய சமூகத்தின் திறன்கள், நிபுணத்துவம் மற்றும் அனுபவம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியம்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தூதர்களுக்கான பயிற்சி, கலாச்சார பரிமாற்றம், விசா விலக்கு…

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை  அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய அடிப்படைச் சம்பளம் / ஒய்வூதியத்தின்  50%-ஐவிட…

தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக…

ஊழியர்களின் இணையவழிக் கற்றலுக்கு உதவும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஐகாட் ஆய்வகத்தை அமைக்க உள்ளது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட  அனைத்து ஊழியர்களின் இணையவழிக் கற்றலுக்கு உதவும் விதமாக, ஐகாட் (iGOT) எனப்படும் ஒருங்கிணைந்த அரசு இணையவழிப் பயிற்சி தளம் ஒன்றை ஏற்படுத்துமாறு, இந்த அமைச்சகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்…

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தைரியமான தொலைநோக்குப் பார்வையை தொழில்துறை தலைவர்கள் பாராட்டியதுடன், சீர்திருத்தங்கள், புதுமைப் படைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் அரசின் ஆதரவையும் பாராட்டினர் டிஜிட்டல் ஆளுகைக்கான உலகளாவிய கட்டமைப்பின் அவசியத்தை தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்துகின்றனர் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில்…

அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார் ITU-WTSA முதல் முறையாக இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் நடத்தப்படுகிறது ஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ-ல் பங்கேற்க 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப…

பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் 3 ஆண்டுகள் நிறைவையொட்டி பாரத மண்டபத்தில் உள்ள அனுபூதி மையத்திற்கு பிரதமர் வருகை

பாரத மண்டபத்தில் உள்ள அனுபூதி மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி  வருகை தந்தார். இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதில் பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இதுபற்றி சமூக ஊடக எக்ஸ்…

பிஎம் விரைவு சக்தி: இந்தியாவின் உள்கட்டமைப்பிலும் போக்குவரத்து  இணைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றியபோது ‘பிஎம்  விரைவு சக்தி’ முயற்சியை அறிவித்தார். 2021, அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்ட பலவகை இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டம்  இன்று (2021, அக்டோபர் 13) அதன் மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த டிஜிட்டல் தளம் ரயில்வே, சாலைப்போக்குவரத்து  உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து முறைகளில் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற, திறமையான இணைப்பை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைதூர இணைப்பை மேம்படுத்துகிறது; பயண நேரத்தைக் குறைக்கிறது. பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிப்பாதைகள், சரக்குகள் ஏற்றும்/நில துறைமுகங்கள்,  உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களை பிஎம்  விரைவு சக்தி ஒருங்கிணைக்கிறது. பிஎம்  விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம், 44 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. மொத்தம் 1,614 தரவு அடுக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தரவு துல்லியத்தை உறுதி செய்வதற்காக, முக்கிய உள்கட்டமைப்பு அமைச்சகங்கள் மூன்றடுக்கு அமைப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) இறுதி செய்துள்ளன. பிஎம் விரைவு சக்தியை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர்ட்டல் மாவட்ட அதிகாரிகளுக்கு கூட்டாகத் திட்டமிடல், உள்கட்டமைப்பு இடைவெளியை அடையாளம் காணுதல், திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் உதவும். இந்த போர்ட்டலின் பீட்டா பதிப்பு ஏற்கனவே 28 ஆர்வமுள்ள மாவட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.  2024, செப்டம்பர் 18 அன்று இந்த மாவட்டங்களுக்கு பயனர் கணக்குகள் வழங்கப்பட்டன. போர்ட்டலின் சோதனை ஓட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 2024 அக்டோபரில் நோக்குநிலை திட்டங்களுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு 2025, மார்ச் 31-க்குள் முடிக்கப்படும். ஒருங்கிணைந்த, திறமையான, செலவு குறைந்த தளவாட நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேசிய சரக்குப் போக்குவரத்துக்  கொள்கை 2022,  செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது. சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பது, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு (எல்பிஐ) தரவரிசையை முதல் 25 நாடுகளில் ஒன்றாக மேம்படுத்துவது,  தரவு சார்ந்து முடிவெடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றை  இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவு  சக்தி சஞ்சார் போர்டல் நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை  சேவைகளுக்கு உலகளாவிய மற்றும் சமமான அணுகல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான பார்வைகளில் ஒன்றாகும். பிஎம் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்திற்கு இணங்க, மையப்படுத்தப்பட்ட வழி உரிமை  ஒப்புதல்களுக்காக “விரைவு சக்தி சஞ்சார்” போர்ட்டல் 2022, மே 14  அன்று தொடங்கப்பட்டது. விரைவு சக்தி சஞ்சார் போர்ட்டல் என்பது தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை விரைந்து உருவாக்க  உதவும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும். இது ஒரு மையப்படுத்தப்பட்ட வழி உரிமை  போர்ட்டல் ஆகும். இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்/உள்கட்டமைப்பு வழங்குநர்கள் / இணைய சேவை வழங்குநர்கள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு வழி உரிமை ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது. 2024, அக்டோபர் 11  நிலவரப்படி, 2.11 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளம் அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனும் தொடர்புடைய ரயில்வே அமைச்சகம் , சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் , சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய மத்திய அமைச்சகங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவைகள் 2022, அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டன. 13 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் 5 ஜி சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், இது உலகில் எங்கும் இல்லாத 5 ஜி-ன் விரைவான வெளியீடாகும். நாட்டில் தொலைத்தொடர்பு இணைப்பை மேலும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுமார் 55 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜி இணைப்பை வழங்க ரூ.41,331 கோடி செலவில் மொத்தம் 41,160 மொபைல் கோபுரங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிஎம் விரைவு சக்தி முன்முயற்சி இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சி மாற்றம்பெறும்  அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது தடையற்ற, திறமையான பலவகைப் போக்குவரத்து வலையமைப்பு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு அமைச்சகங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலமும்,  தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும், சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் இது முயற்சி செய்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:  “நாட்டு மக்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துகள். அன்னை துர்கா தேவி மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், நீங்கள் அனைவரும்…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta