குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார்.கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்:பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ் சார்பாக, பாரத ரத்னாவை அவரது மகன் திரு பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த சௌத்ரி சரண் சிங் சார்பில் அவரது பேரன் திரு ஜெயந்த் சௌத்ரி பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் டாக்டர் நித்யா ராவ், பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.
கர்பூரி தாக்கூர் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த கர்பூரி தாக்கூர் சார்பில், அவரது மகன் திரு ராம்நாத் தாக்கூர் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.