Tue. Dec 24th, 2024

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத தெரிவித்துள்ளார்.குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:”ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. மேலும் இது அன்பு மற்றும் இரக்கத்தின் அடையாளமாகும். உண்மை நித்தியமானது, அழிவில்லாதது என்ற செய்தியை ஈஸ்டர் நமக்குச் சொல்கிறது. தியாகம் மற்றும் மன்னிப்பின் பாதையை இது நமக்குக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் நம்மை வழிநடத்துகின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், இயேசு கிறிஸ்துவின் மதிப்புகளை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் நம் சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்பி, நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்போம்.”இவ்வாறு தமது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் செயலக அறிவிப்பு.


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta