2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் இன்று (26.03.2024) கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க (ஜனநாயக கடமையை நிறைவேற்ற) வேண்டும் என்பதற்காக பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கொடி அணிவகுப்பில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.
அப்போது, முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜா அவர்கள் உடனிருந்தார்கள்.