உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது நுகர்வோருக்கு ‘பாரத் ரைஸ்’ சில்லறை விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ‘பாரத் ரைஸ்’ பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டக சாலை ஆகிய 3 ஏஜென்சிகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாரத் அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.29 ஆக இருக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் அரிசி விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி முதலில் மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொபைல் வேன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும், மேலும் இது மிக விரைவில் இ-வணிகத் தளங்கள் உள்ளிட்ட பிற சில்லறைக் கடைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.