மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்.
மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் நாளை (28.01.2024) திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு வருகை தருவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று (27.01.2024) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri), அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேதகு தமிழக ஆளுநர் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 01 – கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 09 – துணை காவல் கண்காணிப்பாளர்கள், 30 – ஆய்வாளர்கள் உட்பட 650-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன், B.E அவர்கள், அனைத்து உட்கோட்ட, சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.