நேற்று 25 ஜனவரி 2024 தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் முருகப்பெருமானின் அருளை வேண்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“தைப்பூசத்தை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். முருகப்பெருமான் எப்போதும் நமக்கு அருள் புரிந்திடட்டும். இந்த சிறப்பு நாள் அனைவருக்கும் வலிமையையும் செழிப்பையும் அளிக்கட்டும். அனைவரின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக பிராத்திக்கிறேன்.”