Tue. Dec 24th, 2024

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் (19.01.2024) டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடர உள்ளது.

இந்த மாற்றம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள்: பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இத்தொலைக்காட்சியின் பாரம்பரியம் குன்றாமல், அதேவேளையில் புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்களை கொண்ட ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். புதிய அம்சங்களுடன் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியா-தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்குகிறது – பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta