பினாங்கு கன்வென்ஷன் மற்றும் எக்ஸிபிஷன் பீரோ, பினாங்கு ரோட்ஷோ டு இந்தியா 2024 இன் 7வது பதிப்பை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தியப் பயண ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பினாங்கைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.
மலேசியா மாநிலமான பினாங்குக்கு நேரடி விமான சேவையைப் பெற்ற முதல் இந்திய நகரமாக சென்னை இருக்கலாம். “சென்னைக்கும் பினாங்குக்கும் நேரடி விமான சேவைக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தற்போது, பினாங்குக்கு வருபவர்கள் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் செல்ல வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற பினாங்கு ரோட்ஷோ 2024 இன் 7வது பதிப்பில் பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார அமைச்சர் வோங் ஹான் வை கூறினார்.