Tue. Dec 24th, 2024

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் நாட்டின் தொழிற்பயிற்சியில் புரட்சியை ஏற்படுத்துவதையும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணியில் அதன் பணியாளர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சிறந்த  முயற்சிகளைத் தொடங்குவதாக அறிவித்தது. நொய்டாவில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய  திறன் மேம்பாடு மற்றும்  தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி இன்று வருகை தந்தபோது ஆற்றிய உரையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை இலக்காகக் கொண்ட 200 ஐ.டி.ஐ.களில் டிஜிட்டல் உற்பத்தித்திறன் செயற்கை நுண்ணறிவு திறன் ஆகியவற்றிற்கான மைக்ரோசாப்டின் திறன் சாக்ஷம் திட்டத்தின் விரிவாக்கம் என்பது இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கடைசி அமர்வில் திறன் சாக்ஷம் திட்டத்தின் கீழ், 8500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 15 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு 1200 மணிநேர செயற்கை நுண்ணறிவு பயிற்சி கிடைக்கும். மேலும் இது தவிர, சுமார் 400 கூடுதல் மணிநேரங்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்கள் மற்றும் மைக்ரோசாப்ட் உதவியுடன்   காணொலிக் காட்சி  வாயிலாக  வேலைவாய்ப்புகள் பயிற்சி ஆகியவை கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044927


வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு அறிமுகம் ஆகியவை தொழிற்பயிற்சி நிலையங்களை மாற்றியமைக்க உதவும்: மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta