தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், வரவிருக்கும் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் (டபிள்யு.டி.எஸ்.ஏ)-24 இன் ஒரு பகுதியான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யு)-டபிள்யு.டி.எஸ்.ஏ-24 ஹேக்கத்தான் “செயற்கை நுண்ணறிவு பாரதம் 5ஜி/6ஜி நடைமுறைகளை” புதன்கிழமை அறிமுகப்படுத்தினார். இது புதுமைகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் சக்தியைப் பயன்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச ஹேக்கத்தான் 2024 அக்டோபர் 15 முதல் 24 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ள டபிள்யு.டி.எஸ்.ஏ-24 நிகழ்வை முன்னிட்டு தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து ஐ.டி.யு-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய உரையை வழங்கிய டாக்டர் மிட்டல், நமது உலகத்தை வடிவமைக்கும் தீர்வுகளை உருவாக்க இளம் மனங்களை ஊக்குவிக்கவும் அதிகாரம் அளிக்கவும் நமக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். “இந்த ஹேக்கத்தான், இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கனவுகளை யதார்த்தமாக மாற்றவும், சமூகத்தில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு தளமாகும்”, என்பதை டாக்டர் மிட்டல் சுட்டிக்காட்டினார்.
“வலையமைப்புகளில் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றலைப் பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சிறந்த நிபுணர்கள், இளம் மாணவர்கள், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள், துடிப்பான புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையை ஒன்றிணைக்க இது ஒரு வாய்ப்பாகும்” என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2043333