10-வது தேசிய கைத்தறி தினம் ஜன்பத்தில் உள்ள கைத்தறி ஹாட்டில் சனிக்கிழமை தொடங்கியது, தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கைத்தறி கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது, இது ஆகஸ்ட் 16 வரை யடைபெறும்.
பாரம்பரியம் என்ற தொடரின் பிரத்தியேக கைத்தறி கண்காட்சி என்பது முந்தைய ஆண்டு தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி நடைபெற்ற கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாகும். இந்த ஆண்டு, 10- வது தேசிய கைத்தறி தினம் வரும் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு சந்தை இணைப்பினை ஏற்படுத்தித் தருகிறது.
இந்தக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.இந்தியாவின் சில கவர்ச்சியான இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கைத்தறி பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வின் போது, கைத்தறி ஹாட்டில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் நேரடியாக பொருட்களை சில்லறை விற்பனை செய்ய 75 அரங்குகள், இந்தியாவின் நேர்த்தியான கைத்தறியின் தொகுக்கப்பட்ட தீம் காட்சி, இயற்கை சாயங்கள், கஸ்தூரி பருத்தி, வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்குகள், நேரடி தறி செயல்விளக்கம், இந்தியாவின் நாட்டுப்புற நடனங்கள், சுவையான பிராந்திய உணவு வகைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும்.
பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியின் 112-வது அத்தியாயத்தில் கைத்தறி கைவினைஞர்களின் பணி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது மற்றும் கைத்தறி தயாரிப்புகள் மக்களின் இதயங்களில் தங்கள் இடத்தை உருவாக்கிய விதம் மிகவும் வெற்றிகரமானது, மிகப்பெரியது என்று பாராட்டினார், மேலும் உள்ளூர் தயாரிப்புகளுடன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் ‘#MyProductMyPride’ என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றுமாறு வலியுறுத்தினார்.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் உள்நாட்டு தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது. 2015 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாட முடிவு செய்தது.
முதல் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7, 2015 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நாளில், கைத்தறி நெசவு சமூகம் கௌரவிக்கப்படுகிறது.ம் இந்த நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறையின் பங்களிப்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. நமது கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைத்தறித் தொழிலின் நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நமது கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிதி அதிகாரம் அளிக்கவும், அவர்களின் நேர்த்தியான கைவினைத்திறனில் பெருமிதம் கொள்ளவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கைத்தறித் துறை நமது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும். இந்தியாவில் விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக கைத்தறித் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கைத்தறி நெசவு கலை அதனுடன் பாரம்பரிய மதிப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் நேர்த்தியான வகைகள் உள்ளன.பனாரசி, ஜம்தானி, பலுச்சாரி, மதுபானி, கோசா, இக்காட், படோலா, டஸ்ஸர் சில்க், மகேஸ்வரி, புல்காரி, லஹேரியா, கந்துவா மற்றும் தங்கலியா போன்ற தயாரிப்புகளின் தனித்துவம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களை பிரத்தியேக நெசவுகள், வடிவமைப்புகள் மற்றும் பாரம்பரிய மையக்கருத்துகளுடன் ஈர்க்கிறது.
மத்திய அரசு, கைத்தறித் துறையில் எவ்வித குறைபாடுகளும் இல்லாத மற்றும் எந்தவித பாதிப்பும் இல்லாத உயர்தர பொருட்களை பிராண்டிங் செய்யும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தயாரிப்புகளின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், தயாரிப்புகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இது வகை செய்கிறது. வாங்கும் தயாரிப்பு உண்மையிலேயே கைவினைப்பொருள் என்பதற்கான உத்தரவாதத்தையும் இது வழங்குகிறது. இக்கண்காட்சியில் கலந்து கொள்ளும் அனைத்து கண்காட்சியாளர்களும் தங்களது நேர்த்தியான கைத்தறி ரகங்களை காட்சிக்கு வைக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம் கைத்தறி ரகங்களுக்கான சந்தையை மேம்படுத்துவதும், கைத்தறி சமுதாயத்தின் வருவாயை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.