Tue. Dec 24th, 2024

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் பதிவுகளின் 4.5 கோடி பக்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் முதல் கட்டத்தை ஏற்கனவே முடித்துள்ளது. 2024-ம் ஆண்டில், என்ஏஐ தற்போது அதன் அனைத்து பதிவுகளிலும் 30 கோடி பக்கங்களை (தற்காலிகமாக) டிஜிட்டல் மயமாக்குவதற்கான மற்றொரு திட்டத்தை இரண்டு ஆண்டு காலப்பகுதியில் தொடங்கியுள்ளது.

அனைத்து டிஜிட்டல் ஆவணங்களையும் https://www.abhilekh-patal.in என்ற இணையத்தளத்தில் பொதுமக்கள் இலவசமாக காணலாம்.  இந்த தளத்தை-1,87,031 பேர் கண்டுள்ளனர். – 28,199,  பயனர்கள் பதிவு செய்துள்ளனர். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவுகள்- 5,92,279, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பக்கங்கள்- 3,38,18,191 ஆகும்.

https://www.abhilekh-patal.in – இணையதளத்தின் எதிர்கால வடிவங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அவ்வப்போது கிடைக்கக்கூடிய பிற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு தேடுதல் மற்றும் காணும் அனுபவத்தை மேம்படுத்துவது இந்திய குறித்து தேசிய ஆவண காப்பகம் ஆராயும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


தேசிய காப்பகத்தின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta