Mon. Dec 23rd, 2024

தில்லியில் உள்ள பயிற்சி மையத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவை விதி 176-ன் கீழ், மாநிலங்களவையில் இன்று குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு அனுமதி அளித்த மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நாட்டில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,  பயிற்சி நிலையங்கள் என்பது வணிகமாக மாறியிருப்பதை தாம் காண்பதாகவும் குறிப்பிட்டார்.

செய்தித்தாள் விளம்பரங்களுக்காக பயிற்சி மையங்களால் செய்யப்படும் பெரும் செலவு குறித்தும் திரு தன்கர் கவலை தெரிவித்தார். இது மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பெரும் கட்டணத்திலிருந்து செய்யப்படுவதாகவும், பயிற்சி நிறுவனங்கள் அதிக வருமானத்துடன் கூடிய ஒரு செழிப்பான தொழிலாக மாறியுள்ளன என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு முறையும் நாளிதழின் முகப்பில் படிக்கும் போதும் ஓரிரு பக்கங்கள் விளம்பரங்களாகத்தான் இருக்கின்றன என்றும், விளம்பரத்திற்காக செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.  அத்துடன்  ஒவ்வொரு புதிய கட்டடமும் மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தின் எழுப்பப்படுகிறது என்று கூறினார்

நாட்டில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

முன்னதாக, இன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு சுதான்ஷு திரிவேதி, திருமதி ஸ்வாதி மாலிவால் ஆகியோர் யுபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் உயிரிழப்பு குறித்து விவாதிக்க விதி 267-ன் கீழ் நோட்டீஸ் அளித்தனர். நாடாளுமன்ற விவகார அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு விதி 267-ன் கீழ், இந்த விவகாரத்தை அவசரமாக மேற்கோள் காட்டி விவாதிக்க தயாராக இருந்ததால், விதி 176-ன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கு அவைத் தலைவர் அனுமதி அளித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்  திரு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விதி 267-ன் கீழ் இது குறித்து விவாதிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விதி 267-ன் கீழ் முக்கிய கட்சி உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டு அவையின் ஒருமித்த ஆதரவுடன் மட்டுமே விவாதிக்கப்படும் என்று அவைத் தலைவர் குறிப்பிட்டார்.

Read More @ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038534


பயிற்சி மையங்கள் வருமானத்துடன் கூடிய செழிப்பான தொழிலாக மாறியுள்ளது – திரு ஜக்தீப் தன்கர்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta