கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை மின்னணு அலுவலக நடைமுறை மூலம் மத்திய அரசின் செயலகங்கள் 37 லட்சம் கோப்புகளைக் கையாண்டுள்ளது. அதாவது 94 சதவீத கோப்புகள் மின்னணு கோப்புகளாகவும், 95 சதவீத பெறுதல்கள் மின்னணு வாயிலாகவும் கையாளப்பட்டது. இம்முயற்சியை மேலும் நடைமுறைப்படுத்த மின்னணு அலுவலக முறையை அரசு ஊக்குவித்தது. இதற்கிடையே, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் முதல் 100 நாட்கள் திட்டமிடலின் ஒரு பகுதியாக, 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதனை செயல்படுத்துவதற்கான வழிவகைகள், நிர்வாக தொழில்நுட்ப முறைகள் குறித்து விவாதிக்க நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் நடைபெற்றது. இதில் 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகள், அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032303