Wed. Dec 25th, 2024

அரசு மின் சந்தைத் தளத்தின் (ஜிஇஎம்-ஜெம்) வணிக மதிப்பு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் ரூ.1,24,761 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்
ரூ.52,670 கோடியாக இருந்தது. அதன்படி 136 சதவீத வளர்ச்சியை இது பெற்றுள்ளது.

வலுவான உள்நாட்டு மின்னணு கொள்முதல் சூழலை உருவாக்கும் லட்சிய நோக்குடன் 2016-ல் தொடங்கப்பட்ட அரசு மின் சந்தை, தனித்தனி அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளது. இது அரசு கொள்முதல்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில்  இந்தியா முழுவதும் விற்பனையாளர்களும், சேவை வழங்குபவர்களும் தங்களது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சேவைகள் பிரிவு வணிகம் ரூ.80,500 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 330சதவீத வளர்ச்சியாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் கொள்முதல் இந்த காலகட்டத்தில் ரூ. 1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. நிலக்கரி, பாதுகாப்பு, பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகங்கள் இந்த காலாண்டில் அதிக கொள்முதல் செய்த அமைச்சகங்களாக உருவெடுத்துள்ளன.


அரசு மின்சந்தை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 136 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta