Sat. Apr 19th, 2025

பாதுகாப்பு உற்பத்தியில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் அமைப்புக்கு கைகொடுக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை  செயலாளர் திரு கிரிதர் அரமனே கூறினார். ஜூலை 9, 2024 அன்று இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன்  இணைந்து தர உத்தரவாத இயக்குநரகம்  மெய்நிகர் முறையில் நடத்திய தர சீர்திருத்தங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான அவசியத்தை வலியுறுத்திய அவர், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த தொலைநோக்கை நனவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவரும், குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.

250-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எஸ்ஐடிஎம், ஃபிக்கி, அசோசெம், பிஎச்டி சிசிஐ, சேவை தலைமையகம், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், அரசு தர உதவி முகமைகள், ஸ்டார்ட்-அப்கள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

பாதுகாப்புத் துறையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள், அரசு தர உதவி முகமைகள் மற்றும் இதர பங்குதாரர்களிடையே இதுபோன்ற கலந்துரையாடல்களை மேலும் தொடர்ந்து நடத்துவது என்ற முடிவுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.


உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது: பாதுகாப்புத் துறை செயலாளர்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta