02 07 2024 மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், ஜூன் 28-ம் தேதி, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பத்தி 15.5, 15.11 மற்றும் 5.20-க்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம், தேசிய வழிகாட்டுதலுக்கான தேசிய பணி, மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் குறித்த இரண்டு நாள் தேசிய உணர்திறன் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இதில், ஆசிரியர்கள் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு உயர்மட்ட அமைப்புகளின் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய திரு சஞ்சய் குமார், ஐ.டி.இ.பி.யின் பொருத்தத்தையும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கையும் வலியுறுத்தினார்.