Tue. Dec 24th, 2024

சேவை / பரிவர்த்தனை அழைப்புகளைச் செய்வதற்காக 160xxxxx என்ற புதிய எண் வரிசையைத் தொலைத்தொடர்புத் துறை, அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற முறையான அழைப்புகளை எளிதில் அடையாளம் காண குடிமக்களுக்கு ஒரு வழியை வழங்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி உள்ளது.

தற்போது 140xxxxxxx தொடர், விளம்பரம் / சேவை / பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கான தொலைத்தொடர்பு வழி சந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விளம்பர அழைப்புகளுக்கு 140xx தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், நுகர்வோர் பொதுவாக இதுபோன்ற அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை. இதனால் பல முக்கியமான சேவை / பரிவர்த்தனை அழைப்புகள் தவறவிடப்படுகின்றன. இதன் காரனணமாக உண்மையான நிறுவனங்கள் சேவை / பரிவர்த்தனை அழைப்புகளைச் செய்வதற்கு வழக்கமான 10 இலக்க எண்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. இது 10 இலக்க எண்களைப் பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்ற மோசடி செய்பவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

எனவே, நுகர்வோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், தெரியாத 10 இலக்க எண்களிலிருந்து வரும் தேவையில்லாத அழைப்புகளையும், உண்மையான சேவை / பரிவர்த்தனை அழைப்புகளையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கும், சேவை / பரிவர்த்தனை குரல் அழைப்புகளை பூர்த்தி செய்ய தனி எண் வரிசைகள் தேவைப்பட்டன.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, தொலைத்தொடர்புத் துறை 160xxxxxxx என்ற புதிய எண் தொடரை ஒதுக்கியுள்ளது. இது முதன்மை நிறுவனங்களின் சேவை / பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்குப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். சேவை / பரிவர்த்தனை அழைப்புகளுக்கு எதிராக மற்ற வகை அழைப்புகளுக்கு இடையிலான இந்த தெளிவான வேறுபாடு குடிமக்கள் தங்கள் தகவல்தொடர்புகளை நிர்வகிப்பதை எளிதாக்கும். உதாரணமாக, ஆர்.பி.ஐ, செபி, பி.எஃப்.ஆர்.டி.ஏ, ஐ.ஆர்.டி.ஏ போன்ற நிதி நிறுவனங்களிலிருந்து வரும் சேவை / பரிவர்த்தனை அழைப்புகள் 1601 முதல் தொடங்கும்.

160xxxxxxx தொடரின் அழைப்புகளின் நியாயத்தன்மையில் நுகர்வோர் அதிக நம்பிக்கை வைக்கலாம். இது மோசடிகளுக்கு பலியாவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. சந்தேகத்திற்கிடமான மோசடி தகவல்தொடர்புகளுக்கு, சஞ்சார் சாத்தியில் (www.sancharsaathi.gov.in) உள்ள சக்ஷு பிரிவில் புகாரளிக்குமாறு குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


சேவை மற்றும் பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கென தனி எண் வரிசைகளை தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கியுள்ளது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta