2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 156.1 ஆக இருந்தது, இது 2023, மார்ச் மாதத்தின் அளவுடன் ஒப்பிடும்போது 1.2% அதிகமாகும். முழு நிதியாண்டு 2023-24-க்கான குறியீடு நிதியாண்டு 2022-23 ஐ விட 7.5% அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 2024, மார்ச் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. சில எரிபொருள் அல்லாத கனிமங்கள் தாமிரம், தங்கம், மாங்கனீசு தாது, வைரம், கிராஃபைட், கைனைட், சிலிமனைட், சுண்ணாம்புக் கல், மேக்னசைட் போன்றவை இதில் அடங்கும்.
இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை சேர்ந்து மொத்த எம்.சி.டி.ஆர் கனிம உற்பத்தியில் சுமார் 80% பங்களிக்கின்றன. தற்காலிக புள்ளி விவரங்களின்படி, நாட்டில் இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் அதிக வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் 277 மில்லியன் மெட்ரிக் டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 258 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி என்ற சாதனையை 7.4% வளர்ச்சியுடன் முறியடித்துள்ளது. இதேபோன்ற போக்கைக் காட்டும் வகையில், சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் அடையப்பட்ட 406.5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி சாதனையையும் விஞ்சியுள்ளது. இது நிதியாண்டு 2023-24-ல் 10.7% அதிகரித்து 450 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2023-24-ம் நிதியாண்டில் முதன்மை அலுமினிய உலோகத்தின் உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டின் உற்பத்தி சாதனையை முறியடித்துள்ளது. முதன்மை அலுமினிய உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 40.73 லட்சம் டன்னிலிருந்து 2023-24-ம் நிதியாண்டில் 41.59 லட்சம் டன்னாக 2.1% வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.
இந்தியா உலகின் 2வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், 3-வது பெரிய சுண்ணாம்பு உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் ஆரோக்கியமான வளர்ச்சி, எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற பயனர் தொழில்களில் வலுவான தேவை நிலைமைகளை பிரதிபலிக்கிறது. அலுமினியத்தின் உயர் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் வலுவான பொருளாதார நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் படிக்க: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2019556